பெரம்பலூர் அருகே கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.

பெரம்பலூர் அருகே கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.

401

பெரம்பலூர் அருகே கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.


Perambalur news: Theft of money by breaking the temple bill near Perambalur.

வேப்பந்தட்டை அருகே ரஞ்சன்குடி மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். perambalur news

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்டது ரஞ்சன்குடி கிராமம். இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. perambalur news today

அதில் ரூ. ஆயிரத்திற்கும் குறைவான சில்லரைக் காசுகள், ரூபாய் நோட்டுகளே இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இக்கோயிலில் ஏற்கனவே இரண்டுமுறை உண்டியல் உடைக்கப்பட்டு சில்லரைக் காசுகள் திருடு போயுள்ளது குறிப்பிடத்தக்கது. perambalur district

கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு காவல் ஆய்வாளர் கலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

tags: perambalur news, perambalur news today, perambalur theft, perambalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: