பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை.

301

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை.


Perambalur News: Theft of jewelery and money in Perambalur.


பெரம்பலூரில் வீட்டிலுள்ள பீரோவை உடைத்து நகை பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு மேட்டுத் தெருவில் குடியிருப்பவர் அப்துல் காதர் மனைவி ஷகிலா பேகம் இவருக்கு வயது 42. அப்துல் காதர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.  ஷகிலா இப்பகுதியில் தனது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஷகிலா பேகம் தனது குடும்பத்துடன் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி துறையூர் அருகே உள்ள சித்தரைபட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

Perambalur News:

இந்நிலையில் நேற்று காலை சகிலாவின் வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதைக்  கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சகிலாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தமது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது என்ற விசயத்தை கேள்விபட்டவுடன் உடனடியாக புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்துள்ளார். திறந்து கிடந்த வீட்டிற்குள் சென்று பார்த்ததேபாது பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

என்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்று  பார்த்தபோது பிரோவிற்குள் பர்சில் வைத்து இருந்த 5 பவுன் நெக்லஸ் 2 பவுன் செயின் அரைபவுன் தோடு  என ஏழரை பவுன் தங்க நகைகள், ரொக்கமாக ரூபாய் 50 ஆயிரம் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஷகிலா பேகம் பெரம்பலூர் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தியதோடு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.

Keyword: Perambalur News, Perambalur News today, 

Gulf Tamil News

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: