சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண். 

சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண்.

392

சொத்துக்காக தாய் மற்றும் தங்கையை கொலை செய்த பெண்.

சொத்துக்காகத் தனது தாய் மற்றும் சகோதரியைக் கொலை செய்த பெண்.

Daughter who murdered mother and sister for property.

பெரம்பலூரின் அருகேயுள்ள அய்யலூரில் கடந்த 19-ம் ராஜேஸ்வரி இறந்தும் அவரது தாய் ராணி உயிருக்குப் போராடிய நிலையிலிருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் ஒருபுறம் விசாரித்தாலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய நடந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

நிழற்குடையா..ஓய்வறையா…? பெரம்பலூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம்.

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு.

ராணியின் முதல் மகள் வள்ளிக்கு அதிகளவில் கடன் இருந்ததால் தாயாரிடம் நிலத்தை விற்று பணம் கேட்டு அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். இதற்கு ராணியும் அவர் இளைய மகளுமான ராஜேஸ்வரியும் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த வள்ளி தனது 14 வயது மகனுடன் அதிகாலையில் தாய் வீட்டிற்குச் சென்று அவருக்கு இருமல் மருந்து என்று விஷத்தை கொடுத்துள்ளனர். வீட்டில் படுத்திருந்த ராஜேஸ்வரியைத் துணியால் முகத்தை அழுத்தியும் கயிற்றால்  கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலைகள் குறித்து மருவத்தூர் காவல் ஆய்வாளர் (பெறுப்பு) சுகந்தி வழக்குப் பதிவு செய்து சொத்துக்காகப் பெற்ற தாயையும் கூடப் பிறந்த தங்கையையும் கொலை செய்த வள்ளியையும், கொலைக்கு உடந்தையாக இருந்த வள்ளியின் 14 வயது மகனையும் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பிரசாத்  இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வள்ளியைப் பெரம்பலூர் கிளை சிறையிலும், திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனையும் அடைக்கப்பட்டனர்.

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: