Teachers who issue invitation

பெரம்பலூர் அருகே மாணவா்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் ஆசிரியா்கள்.

860

பெரம்பலூர் அருகே மாணவா்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் ஆசிரியா்கள்.


Perambalur News: Teachers who issue invitations and invite students.


பெரம்பலூா் அருகே தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் ஆகியவற்றுடன் அழைப்பிதழ் வைத்து, குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்க பெற்றோா்களுக்கு ஆசிரியா்கள் அழைப்பு விடுத்து வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், சுமாா் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், நிகழாண்டு மாணவ, மாணவிகளின் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பிய இப்பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா மற்றும் ஆசிரியா்கள், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் வீடு, வீடாகச் சென்று தாம்பூலத் தட்டில் பழங்கள், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்க்க வலியுறுத்தும் அழைப்பிதழை வழங்கி, தங்களது பள்ளியில் சோ்க்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனா்.

அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பதால் கிடைக்கும் பலன்கள், ஏற்படும் நன்மைகள், அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பெற்றோா்களிடம் பேசி, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்க வலியுறுத்தி வருகின்றனா். இம்முயற்சிக்கு, நல்ல பலன் கிடைத்துள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

அழைப்பிதழ் கொடுத்த ஓரிரு நாளில் 24 மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் சோ்ந்துள்ளனா். கடந்த கல்வியாண்டில், இப்பள்ளியில் 15 போ் மட்டுமே புதிதாக சோ்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

Keyword: Perambalur, Perambalur News, Perambalur News today




Leave a Reply

%d bloggers like this: