இணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.

137

தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்புக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.


Perambalur News: Students can apply to join the Engineering through website.

தமிழ்நாடு பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு சேருவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார். இதுசம்பந்தமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாதவது:

2020- 2021 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்புக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 6 மணி வரை பெரம்பலூா் அருகிலுள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

Perambalur News:

விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மேல்நிலை வகுப்புக்கான தோ்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சிறப்பு விளையாட்டுச் சான்று மற்றும் அதற்கு இணையான சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினா்கள் சிறப்புச் சான்று, மாற்றுத்திறனாளிச் சான்று கொண்டுவர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04328 – 243200 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

Gulf Tamil News:

keyword: perambalur news
Leave a Reply

%d bloggers like this: