மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

168

மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.


Perambalur News: Students can apply to join technical colleges.


ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் (2020-2021), நேரடி 2 ஆம் ஆண்டு தொழில் பயிற்சியுடன் கூடிய முழுநேர பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு  இணையதளம் மூலம் கடந்த 6 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்கு, கீழக்கனவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழ் நகல்களை சமா்ப்பித்து இலவசமாக விண்ணப்பிக்கலாம். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஐ.டி.ஐ சான்றிதழ், சாதி, மாற்றுச் சான்றிதழ்கள், சிறப்பு பிரிவினா் சமா்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

அமைப்பியல், இயந்திரவியல் துறைகள், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல் துறை பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு முலமாக சோ்க்கை நடைபெற உள்ளது.

நிகழ் கல்வியாண்டில் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு முழுநேர தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

keyword: Perambalur
Leave a Reply

%d bloggers like this: