கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி. Student drowns

பெரம்பலூர் அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி.

402

பெரம்பலூர் அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி.

Student drowns in a well near Perambalur.

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் இருளர் காலனிப்பகுதியைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு, சாந்தி ஆகியோரின் மகன் மனோகர் (17). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 1 படிக்க இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் இளவரசன் (18), மாயவேல் மகன் கருப்பசாமி (16) செல்வராஜ் மகன் மணிகண்டன் (23), பிச்சமுத்து மகன் சக்திவேல் (22) காசி மகன் முத்துசாமி (16) ஆகியோருடன் அதே ஊரைச் சேர்ந்த தவசி மகன் அன்பழகன்(45) என்பவரது வயல் கிணற்றில் நேற்று மாலை குளிக்கச் சென்றனர். அப்போது சிறிது நேரம் நண்பர்களோடு குளித்த மனோகர் கிணற்றின் மேல் நடுத்திட்டு பகுதியில் அமர்ந்து இருந்துள்ளார்.

பாடாலூர் அருகே புகையிலை விற்பனையாளர்கள் கைது

அரை மணி நேரத்தில் குளித்து முடித்த நண்பர்கள் மேலே வந்து பார்த்தபோது மனோகரை காணவில்லை. அவரது துணிகளும் செல்போனும் மட்டுமே மேலே இருந்ததால், அருகில் மலம் கழிச்ச சென்றிருக்கலாம் என நினைத்து சத்தம்போட்டு அழைத்து பார்த்துள்ளனர்.

மனோகரை காணாததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் வீட்டிற்கும் வராததால் மீண்டும் கிணற்றுக்கு ஓடிவந்து பார்த்துவிட்டு, தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் Student drowns என்ற சந்தேகத்தில் பெரம்பலூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வந்து கொக்கியை உள்ளே வீசித் தேடிப் பார்த்த போது மனோகரின் சடலம் கிடைத்தது. இதுகுறித்து குரும்பலூர் வடக்கு விஏஓ சந்திர மோகன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

tags: perambalur, tamil news
Leave a Reply

%d bloggers like this: