திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்.

232

திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்.

குன்னம் வட்டம், திருமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச் சாவடியை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றது.

இந்த நிறுவனத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தில் இணைந்து தங்களுக்கான கோரிக்கைகளை தொழிற்சங்க வழிகாட்டுதலின்படி நிறைவேற்றி வந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு சுங்கக் கட்டணம் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் வசூலிக்க தடை விதித்திருந்தது. கொரோனா நோய் தொற்றில் தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க அரசனையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத்திற்கான ஊதியத்தை நிறுவனம் வழங்காமல் மெத்தனம் காட்டி வருவதால் நிர்வாகத்திடம் பலமுறை நேரில் முறையிட்டும் வழங்காமல் மறுப்பு தெரிவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியிலருந்து முன்தொகையை எடுக்கவும் முடியாமல் முடங்கியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டடம் நடத்தினர். இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் விஜயகுமார், திருமாந்துறை கிளையின் தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 
Leave a Reply

%d bloggers like this: