State Transport Workers Demonstration in Perambalur

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

177

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். State Transport Workers Demonstration in Perambalur

துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையின் முன்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா தொற்று காரணமாக தற்போது அரசு போக்குவரத்து கழகத்தில் 50 சதவீதம் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து தொழிலாளர்களும் தினமும் பணிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கு வந்தும் பேருந்து வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு பேருந்துகளில் பயணிகளை ஏற்றிவிடும் வேலைகளை வழங்குவதும், பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றி அதிக வசூல் செய்து தர கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், பேருந்து நிலையங்களில் வேலை  செய்யும் தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்காமல் இருப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

[the_ad id=”7251″]

பெரம்பலூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் நிவாரண நிதி கேட்டு மனு.

தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி. யு.சி. பணியாளர் சங்கம்  ஆகிய தொழிற் சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: