திருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

178

திருமாந்துறை சுங்கச்சாவடியில் குடும்பத்துடன் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் 2009-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் சுங்கச்சாவடியை ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகிறது. இந்த சுங்கச்சாவடியில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதம் சுங்கச்சாவடி இயங்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் சுங்கச்சாவடி நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இருந்து வருகிறது. இதை கண்டித்து கடந்த 11-ந் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

[the_ad id=”7251″]

இதை கண்டித்தும், ஊதியம் வழங்கக்கோரியும் நேற்று ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன், அனைத்து கட்சி ஆதரவுடன் உள்ளிருப்பு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

இதில் வேப்பூர் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், தொழிற்சங்க மாநில பொது செயலாளர் காரல்மார்க்ஸ், மாநில செயலாளர் விஜயகுமார், கிளை தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, நகர செயலாளர் ஜாகிர்உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் வீர செங்கோலன், அ.தி.மு.க. கிளை செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து மங்களமேடு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ், குன்னம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் இதுகுறித்து முடிவு செய்யப்படும் என கேட்டுக்கொண்டதன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: