கவுள்பாளையத்தில் கொரோனா பாதித்தோருக்கான சித்தா சிகிச்சை மையம்.

கவுள்பாளையத்தில் கொரோனா பாதித்தோருக்கான சித்தா சிகிச்சை மையம்.

231

Perambalur News: Siddha Treatment Center for Corona Victims at Kaulpalayam.


கவுள்பாளையத்தில் கொரோனா பாதித்தோருக்கான சித்தா சிகிச்சை மையத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திறந்து வைத்தார்.


பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் கொரோனா பாதித்தோருக்கான சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை நேற்று (04.08.2020) மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திறந்து வைத்தார்.
அப்போது சித்தா சிறப்பு சிகிச்சை மையம் சம்பந்தமாக அவர் பேசியதாவது:

தமிழகத்தில் ஏற்கனவே 19 இடங்களில் சித்தா சிகிச்சை மையம் துவங்கப்பட்டு கொரோனா வைரஸ் நோயிலிருந்து பொது மக்களை காப்பாற்றும் பணியில் செயல்பட்டு வருகின்றன தற்போது புதிதாக நமது மாவட்டத்தில் கவுள்பாளையம் கிராமத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்த பொதுமக்களை காக்கும் பொருட்டு சித்தா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Perambalur News: 

அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதியளிக்கப்பட்டுள்ள கொரொனா நோயாளிகளில் பிற நோயாளிகளினால் தொந்தரவு இல்லாத நோயாளிகளை தேர்வு செய்து சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இந்த சித்தா சிறப்பு மையத்தில் 200 படுக்கைகள், குடிநீர், கழிவறை, மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகள், சிசிடிவி கேமரா, கிருமிநாசினி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தினசரி சுழற்சி முறையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி புரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

keyword: Perambalur News
Leave a Reply

%d bloggers like this: