Shops should not be opened

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.

343

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்க கூடாது.


Perambalur News: Shops should not be opened in restricted areas in Perambalur.


பெரம்பலூர் நகராட்சியில் நேற்றுவரை 156 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதில் 114 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில தினங்களில் நகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் வர்த்தக பிரமுகர்கள் அதிகம் இருப்பதால் கடந்த 10ஆம் தேதி நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவுப்படி துறையூர் சாலையில் சிவன் கோவிலில் முதல் கோ-ஆப்டெக்ஸ் வரையிலுள்ள பெரியகடைவீதி, அம்பேத்கர் சிலை முதல் பெரியார் சிலையை வரையிலான என் எஸ் பி சாலை இந்த இரண்டு சாலைகளை இணைக்கும் போஸ்ட் ஆபிஸ் தெரு, பள்ளிவாசல் தெரு, வெங்கடேச புரத்தில் லட்சுமி விலாஸ் வங்கி முதல் கரூர் வைஸ்யா வங்கி வரை தென்புறம் சாலையோர கடைகள் என ஆறு முக்கிய தெருக்கள் பேரி காடுகள் வைத்து போக்குவரத்திற்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் தடை விதித்து அடைக்கப்பட்டன.

Perambalur News:

இதன் காரணமாக இந்த பகுதிகளில் இயங்கி வந்த ஜவுளி கடைகள், நகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகள், உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட 250 கடைகள் கடந்த 10-ம் தேதி முதல் (நேற்று) 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மூடப்பட்டன. இந்த தடை உத்தரவு நாளை 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார்.

எனவே தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வணிக நிறுவனங்களை யாரும் திறக்கக் கூடாது மீறி திறக்கப்படும் வரை திறக்கப்படும் வணிக நிறுவனங்கள் மீது அபராதம் உரிமம் ரத்து செய்து வைத்தல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமரிமன்னன்தெரிவித்துள்ளார்.

Keyword: Perambalur News




Leave a Reply

%d bloggers like this: