கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’.

196

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’.

பெரம்பலூரில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு நகராட்சி மூலமாக ‘சீல்’ வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். tamil news

Perambalur news: Stores sealed for shops that do not comply with Corona regulations.

பெரம்பலூர் நகர வணிகர்களுடன் நேற்று காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வர்த்தக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மகளிர்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் பேசியதாவது:-

கடைகளில் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பு ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டம் போட்டிருக்க வேண்டும். முககவசம் அணியாமல் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு வணிகர்கள் பொருட்களை தரக்கூடாது. கட்டாயமாக முக கவசங்கள், கையுறைகள் அணிந்து வர பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும். அதே போல் வணிகர்களும் வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு கடைகளில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். perambalur today news

முககவசம் கட்டாயம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதனை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தும் விதத்தில் அறிவிப்பு பலகைகளை வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பாக பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு காவல்துறையினர் முதல் இரண்டு தடவை அபராதம் விதிப்பார்கள். அதையும் மீறும் கடைகளுக்கு நகராட்சி மூலம் ‘சீல்’ வைக்கப்படும் கூறினார். கடைகளுக்கு முன்பு வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு வாடிக்கையாளர்கள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்க வணிகர்கள் தங்களது கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தவும் கேட்டு கொண்டார். (daily tamil news)

பெரம்பலூர் காவலர் ஏட்டு செல்வம் தலைமையிலான காவலர்கள் செய்திருந்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, ஆய்வாளர்கள் சுப்பையா (பெரம்பலூர்), கோபிநாத் (போக்குவரத்து), கலையரசி (மகளிர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வணிகர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

tag: perambalur news, perambalur today news, tamil news, daily tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: