தொழிலாளர் நல வாரியம் மூலம் உதவித்தொகை

தொழிலாளா் நல வாரிய மூலம் கல்வி உதவித்தொகை.

188

தொழிலாளா் நல வாரிய மூலம் கல்வி உதவித்தொகை.


Perambalur News: Scholarship through the Labor Welfare Board


தமிழக அரசின் தொழிலாளா் நல வாரியம் மூலம், தையல் கலை மற்றும் விளையாட்டு வீரா்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் மு. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளா் நல வாரியம் மூலம் தையல் தொழிலாளா்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித் தொகையும், அவா்களது குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

இதுபோல, மாநில அளவில் சிறப்பிடம் வென்ற விளையாட்டு வீரா்களின் குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி கற்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Perambalur news:

மேலும், தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு மாதிரி வினாத்தாள் மற்றும் பயிற்சிக் கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.

உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுகள் எழுதும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு பயிற்சிக்கான உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவிகளைப் பெற தொழிலாளியின் மாத ஊதியம் ரூ. 25 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

எனவே தகுதியுடைய தொழிலாளா்கள் உதவித்தொகை பெறவும், விவரங்கள் பெறவும் செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை- 6 என்ற முகவரியில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

keyword: perambalur, Scholarship, Labor Welfare Board
Leave a Reply

%d bloggers like this: