சாத்தான் குளம் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம். Sathankulam incident

சாத்தான் குளம் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.

173

சாத்தான் குளம் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.

Demonstration in Perambalur condemning Sathankulam incident.

சாத்தான்குளம் காவலர்கள் தாக்குதலை கண்டித்தும், பொது மக்களுடன் பழக பயிற்சி அளிக்க வலியுறுத்தியும் பெரம்பலூரில் மக்கள் நல போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்  நடத்தியது.

தூத்குக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீசார் செல்போன் கடை உரிமையாளர்களான தந்தை மகனை தாக்கியதை கண்டித்தும், மரணத்துக்கு காரணமான காவலர்கள் மீது செக்சன் – 302ன் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யவும், இனி இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில்சாத்தான் குளம் சம்பவத்தை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம். Sathankulam incident நடக்காதிருக்க தமிழக காவலர்களுக்கு பொது மக்களுடன் பழக, பயிற்சி அளிக்க வலியுறுத்தியும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலைமுன்பு, பெரம்பலூர் மாவட்ட மக்கள் நல போராட்டக்குழு சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால், தமிழ் நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன், திராவிடர் கழக நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

tags: tamil news
Leave a Reply

%d bloggers like this: