power pole breakage

வி களத்தூரில் மின் கம்பம் முறிந்து விழும் அபாயம்.

169

வி.களத்தூரில் மின் கம்பம் முறிந்து விழும் அபாயம்.


Perambalur News: Risk of power pole breakage in V Kalathur.


வி.களத்தூரில் ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூரில் வடக்கு சின்ன தெருவில் மின்கம்பம் ஒன்று கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கம்பத்தின் கீழ் பகுதி தண்ணீரில் அறித்துப்போய் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றது. அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் என்ற நிலை உள்ளது.

அந்த பகுதியானது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது.  மேலும் குடியிருப்பு பகுதியை ஒட்டி ஆபத்தான நிலையில் உள்ளது. ஆபத்தை அறியாத குழந்தைகள் அங்கு தினமும் விளையாடுகின்றனர். மின்கம்பம் முறிந்து விழும் பட்சத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

இது தொடர்பாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் முஹம்மது பாருக் கூறுகையில் ஆபத்தான அந்த கம்பத்தை மாற்ற வேண்டும் என ஆறு மாதமாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் வி களத்தூரில் மின்சார பற்றாக்குறை பிரச்சினை இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுடைய குடிநீர் மோட்டார் அடிக்கடி பழுதாகின்றது. அதனால் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கடைவீதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டியும் பலமுறை கோரிக்கை வைத்தும் சரி செய்யப்படவில்லை. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

நன்றி – தினகரன்

keyword: perambalur




Leave a Reply

%d bloggers like this: