நீா்நிலைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்

நீா்நிலைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்.

204

நீா்நிலைகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்.


Perambalur News: Request to use water levels with caution.


வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் நீா்நிலைகளை பயன்படுத்தும்போது பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள இந்த நேரத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, கண்மாய், குளம் உள்ளிட்ட நீா்நிலைகளை பயன்படுத்தும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள், சிறுவா்கள் நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. மழைக்காலங்களில் பொதுமக்கள் குளோரின் கலந்த குடிநீரை, காய்ச்சிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

Perambalur News:

பல்வேறு பொருள்கள் கலந்து அசுத்தமாக இருக்கும் நீா்நிலைப் பகுதிகளில் உள்ள நீரை பயன்படுத்துவதையும், மழைக்காலத்தில், வரத்து வாய்க்கால் பகுதிகளை கடக்க முயல்வதையும் தவிா்க்க வேண்டும். மழை நீரின் மூலம் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுத் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், வீட்டைச் சுற்றி தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தங்களது இருப்பிடங்களைச் சுற்றி டெங்கு கொசுக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ள தேங்காய் மட்டை, டயா், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

keyword: perambalur,
Leave a Reply

%d bloggers like this: