பெரம்பலூர் ஆயுதப்படை போலீசார் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.

170

பெரம்பலூர் ஆயுதப்படை போலீசார் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. The Perambalur Armed Police gave relief.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் துறையில் இயங்கும் அலுவலகங்களை தூய்மையாக பராமரித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்ப்பட்டது.  கொரோனா தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கையொட்டி இந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை ஆயுதப்படை போலீசார் சார்பில் வழங்கப்பட்டன.

[the_ad id=”7251″]

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினர்.

மாவட்ட ஆயுதப்படை முதல்நிலை காவலர்கள் இந்த நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: