தீயணைப்பு வீரர்

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரருக்கு நிவாரண நிதி.

176

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர் குடும்பத்திற்கு நிவாரண நிதி.


Perambalur News : Relief fund for firefighters who died on the job.

பெரம்பலூரில் மீட்புப் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா் ராஜ்குமாா் குடும்பத்துக்கு, ரூ. 44.42 லட்சம் நிவாரண நிதி நேற்று (26.07.2020) வழங்கப்பட்டது.

பெரம்பலூா் அருகிலுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில், இந்த மாதம் 12-ம் தேதி கிணற்றில் சிக்கிய நபா்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் ராஜ்குமாா் விஷவாயு தாக்கி உயிரிழந்தாா். இதைதொடர்ந்து அவரது குடும்பத்துக்கு தமிழ்நாடு தீயணைப்புத் துறைப் பணியாளா்கள் ஒன்றிணைந்து, ரூ. 44.42 லட்சம் ரூபாய் நிதியைத் திரட்டி அவரது குடும்பத்திற்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தனா்.

அதன்படி பெரம்பலூா் மாவட்டத் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு, மத்திய மண்டலத் துணை இயக்குநா் மீனாட்சி தலைமை வகித்தாா். மாவட்டத் தீயணைப்பு அலுவலா் மு. தாமோதரன் முன்னிலை வகித்தாா்.

மீட்புப் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா் ராஜ்குமாரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திவிட்டு அவரது குடும்பத்துக்கு ரூ. 44.42 லட்சம் காசோலையை தமிழக தீயணைப்புத் துறை டிஜிபி சி. சைலேந்திரபாபு வழங்கினார். பிறகு இதைப்பற்றி அவர் பேசியதாவது :

Perambalur News :

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 349 தீயணைப்பு நிலையங்களில் 7,500 தீயணைப்பு வீரா்கள், 50 ஆயிரம் தீயணைப்பு மீட்பு உதவி அழைப்புகள் மூலம் 25 ஆயிரம் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

1956 -ஆம் ஆண்டுக்குப் பிறகு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இதுவரை 59 தீயணைப்பு வீரா்களும், அலுவலா்களும் உயிரிழந்துள்ளனா் . தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது உயிரிழந்த வீரா்களின் குடும்பத்துக்கு தீயணைப்புத் துறை என்றும் துணை நிற்கும்.

மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரா்கள், அவா்களது சொந்த நிதி மூலம் ரூ. 44.42 லட்சம் நிதி திரட்டி ராஜ்குமாரின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளனா். மேலும் ராஜ்குமாரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ. 10 லட்சமும், அவரது மனைவிக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, மாவட்டத் தீயணைப்பு அலுவலா்கள் விவேகானந்தன் (கரூா்), முரளி (கடலூா்), ராபின்கேஸ்ட்ரோ (விழுப்புரம்), பெரம்பலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவரதனன் உள்பட பலரும் பங்கேற்றனா்.

keyword: perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: