register-for-skills-training

திறன் பயிற்சிக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

315

திறன் பயிற்சிக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு. Register for Skills Training.

திறன் பயிற்சி சம்பந்தமாகப் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது.

கொரோனா நோய்த் தொற்று பிரச்சனைகளால் வெளிநாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து அவர் அவர் ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இதுபோல் திரும்புவார்களின் வேலைத்திறன் மற்றும் அவர்களது அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கு ஏற்றவாறு தனியார்த் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் தேர்வுகளில் அவர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி தனியார்த் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகின்றது.

திறன் பயிற்சிக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை.

[the_ad id=”7251″]

வெளிநாடுகள் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து ஊருக்குத் திரும்பியவர்கள் தாங்கள் விரும்பும் திறன் பயிற்சி மற்றும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினை பெறுவதற்கென தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் https://www.tnskill.tn.gov.in/ என்னும் இணைய தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விபரங்களுக்குத் தொடர்புடைய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளார்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: