சிறப்ப முகாம் மூலமாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

184

சிறப்ப முகாம் மூலமாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மங்களமேடு அருகே பெருமத்தூர் கிராமத்தில் அரசு மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடம் இருந்து பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஊராட்சித் தலைவர் சுரேஷ் தலைமை நடைபெற்ற இம்முகாமில் உதவி வேளாண்மை அலுவலர் அருளானந்தன் விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். விவசாயிகள் மனுக்களை பூர்த்தி செய்து கொடுக்கும் போது அதனுடன் கணினி சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தண்ணீர் மற்றும் மண் மாதிரி பரிசோதனை முடிவுகள், புகைப்படம்-2 இவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அரசு மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கான அரசு மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என உதவி வேளாண்மை அலுவலர் தெரிவித்தார்.

[the_ad id=”7251″]

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: