தனியார் பள்ளி

பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்.

380

பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம்.


Perambalur News: Private school teachers starve in Perambalur.

பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இடைக்கால நிவாரணம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டினிப்போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

  • தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பள்ளிக்கு அரசு வழங்க வேண்டிய ஆர்டிஇ நிலுவைத் தொகை 40 சதவிகிதம் மற்றும் கல்வித் தொகை 100 சதவிகிதம் உடனே வழங்க வேண்டும்.
  • நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் மூன்றாண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  • அனைத்து பள்ளிகளுக்கும் மூன்றாண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும்.
  • ஆசிரியர் மற்றும் இதர பணியாளர்களுக்கு கரோனா இடைக்கால நிவாரண உதவித் தொகையாக மாதம் 10 ஆயிரம் வழங்க வேண்டும்.
Perambalur News:

என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி வளாகத்தில் நேற்று ஒரு நாள் அடையாள பட்டினிப்போராட்டத்தை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட அளவில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் 28 பள்ளிகளைச் சேர்ந்த தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 750 பேர் அந்தந்த பள்ளிகளில் பங்கேற்றனர்.


tag: perambalur news, perambalur news today, perambalur today news, perambalur district news,Leave a Reply

%d bloggers like this: