பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது. 

727

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலம் தவிர தமிழகம் முழுவதும் 7 மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்தியதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்து அந்தந்த மண்டலத்திற்குள்  இந்த மாதம் 1-ம் தேதி முதல் இயக்கப்படுகின்றன.

இதே போல நேற்று (புதன்கிழமை) முதல் தனியார் பேருந்துகளும் இயக்குவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருச்சி மண்டலத்திற்குள் தனியார் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன.

[the_ad id=”7251″]

பெரம்பலூரில் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அகரம் சீகூர், தொழுதூர், லெப்பைக்குடிக்காடு, வி. களத்தூர், ஜெயங்கொண்டம், துறையூர், திருச்சி, பூலாம்பாடி, லால்குடி, அத்தியூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 45 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

[the_ad id=”12149″]
Leave a Reply

%d bloggers like this: