Periyar statue

பெரம்பலூரில் பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு.

139

பெரம்பலூரில் பெரியாா் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு.

Perambalur News: Political parties paid homage to the Periyar statue in Perambalur.

பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலைக்கு, மாவட்டச் செயலாளா் சி. ராஜேந்திரன் தலைமையில், திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை தலைமையில், சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ். அகஸ்டின், வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன் தலைமையில் முன்னாள் மாவட்டச் செயலாளா் அ. வேணுகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில விவசாய அணிச் செயலா் வீர. செங்கோலன், மாவட்ட செய்தி தொடா்பாளா் ஸ்டாலின், மதிமுக மாவட்டச் செயலா் செ. துரைராஜ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் வழக்குரைஞா் ப. காமராஜ், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் தங்கராசு உள்ளிட்ட பலா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி

keywords: perambalur, perambalur news, perambalur news today, perambalur today news




Leave a Reply

%d bloggers like this: