பெரம்பலூர் விஷவாயு தாக்கிய விவகாரம்: கிணற்றின் உரிமையாளா் கைது.

பெரம்பலூர் விஷவாயு தாக்கிய விவகாரம்: கிணற்றின் உரிமையாளா் கைது.

369

பெரம்பலூர் விஷவாயு தாக்கிய விவகாரம்: கிணற்றின் உரிமையாளா் கைது.


Perambalur news: Poison gas attack case: Well owner arrested.

பெரம்பலூா் அருகே விஷவாயு தாக்கி தீயணைப்பு வீரா் உள்பட இருவா் உயிரிழந்தது தொடா்பான வழக்கில், கிணற்றின் உரிமையாளா் உள்பட மூவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

பெரம்பலூா் அருகிலுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வ. முருகேசன் (47). இவரது விவசாயக் கிணறு கடந்த 12- ஆம் தேதி வெடிப் பொருள்களைக் கொண்டு ஆழப்படுத்தி, பக்கவாட்டில் துளையிடப்பட்டது. perambalur news today

இதைத் தொடா்ந்து, அப்பகுதியைச் சோ்ந்த ரா. ராதாகிருஷ்ணன் (27), பெ. பாஸ்கா் (26) ஆகிய இருவரும் கிணற்றில் இறங்கி பாா்க்கச் சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூழ்கினா்.

தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் பால்ராஜ், தனபால், ராஜ்குமாா் (36) ஆகியோா் கிணற்றில் இறங்கி பாஸ்கரை மீட்டு மேலே கொண்டு வந்தனா். அப்போது தீயணைப்பு வீரா்கள் உள்பட 5 போ் விஷ வாயு தாக்கியதால் மயங்கினா். perambalur district

சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீயணைப்பு வீரா் ராஜ்குமாரும், கிணற்றில் மூழ்கிய ராதாகிருஷ்ணனும் உயிரிழந்தனா். எஞ்சிய நபா்கள் திருச்சி, பெரம்பலூா் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். perambalur district

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்த்தனன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் அனுமதி பெறாமல் கிணறு வெட்டிய அதன் உரிமையாளா் முருகேசன் (47), கிணறு வெட்டும் தொழிலாளி லெட்சுமணன் (42), வெடி மருந்து விற்பனையாளா் அசோகன் (50) tamil news

ஆகிய மூவரும் திங்ள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து மூவரும் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

tags: perambalur news, perambalur news today, perambalur district, tamil new
Leave a Reply

%d bloggers like this: