பெரம்பலூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் நிவாரண நிதி கேட்டு மனு.

158

பெரம்பலூர் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் நிவாரண நிதி கேட்டு மனு. Petition seeking relief for photographers.

பெரம்பலூர் மாவட்ட வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று (திங்கள்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று கூடினர். பின்னர் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மனு போடும் பெட்டியில் கோரிக்கை மனுவை போட்டனர். அந்த மனுவில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்:

[the_ad id=”7251″]

  • கொரோனா தொற்று பரவலின் தடுப்பு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கவேண்டும்.
  • அரசு சார்பில் கொரோனா ஊரடங்கின்போது இடைக் கால நிவாரணமாக மாதம் ரூபாய் இரண்டாயிரம் வழங்க வேண்டும்.
  • மாத தவணை கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது என தனியார் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
  • ஒளிப்பட நிலையங்களின் கடை மற்றும் வீட்டுவாடகையையும், மின் கட்டணத்தையும் தள்ளுபடி செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் பாடாலூர் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று (திங்கள் கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மனுப்பெட்டியில் போட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

[the_ad id=”7251″]

கல் குவாரியில் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் சாவு.

பாடாலூரின் தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரங்களில் வாழ்வாதாரத்திற்காக வியாபாரங்களை செய்து அதில் வரும் வருவாயைக் கொண்டு நாங்கள் குடும்பங்களை நடத்தி வருகின்றோம். இந்நிலையைில் ஊராட்சி நிர்வாகம் சாலையோர தரை கடை வியாபாரிகளிடம் தினமும் ரூ.50 தரை வாடகை தரவேண்டும் என கூறி வசூல் செய்து வருகின்றனர். பாடாலூர் ஊராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்தி தரை வாடகை கேட்டு வசூல் செய்வதை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்துள்ளனர்.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: