ஆக்கிரமிப்பு நிலத்தை

பெரம்பலூா் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக்கோரி மனு

366

பெரம்பலூா் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக்கோரி மனு.


perambalur news : Petition to reclaim occupied land near perambalur.

பெரம்பலூா் அருகே அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அபகரிக்க முயல்வோா் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர வேண்டுமென சமத்துவபுரம் பகுதி மக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மனு அளித்தனா்.

இதுகுறித்து, பெரம்பலூா் அருகே வடக்குமாதவி சாலை, எளம்பலூா் சமத்துவபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) கிறிஸ்டியிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரம், அண்ணா குடியிருப்பு சாலை, ரோவா் நுழைவுப் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடத்தில், சுமாா் 40 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்தோம். அந்த நிலத்தை காலி செய்ய வேண்டுமென மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தியது. அதன்படி, அந்த இடத்தை காலிசெய்து ஒப்படைத்தோம். வீடுகளை இழந்தோருக்கு, வடக்குமாதவி சாலை, எளம்பலூா் சமத்துவபுரம் மேற்கு பகுதி, சித்தா் கோயில் அருகேயுள்ள மலையடிவாரத்தில் இடம் ஒதுக்கி கடந்த 31.3.2015-இல் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

perambalur news

அந்த இடத்தில் பசுமை வீடு கட்டித்தரப்படும் என மாவட்ட நிா்வாகம் கூறியது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், குடிசை வீடு அமைத்து கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இந்நிலையில், சிலா் குடியிருப்புப் பகுதிகளை காலி செய்ய வற்புறுத்தியதோடு, பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடத்தை சுத்தம் செய்து ஆக்கிரமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது நிலத்தை மீட்டுதர வேண்டும்.

keywords: perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam

Gulf Tami News
Leave a Reply

%d bloggers like this: