பெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.

230

பெரம்பலூர் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.

பெரம்பலூர் மாவட்ட உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுச் சென்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதில் உணவகங்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தத் தளர்வு நேற்று முதல் அமல் ஆனது.

[the_ad id=”7251″]

பெரம்பலூரில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் பார்சல் மட்டுமே வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட நேற்று முதல் அனுமதிக்க தொடங்கியுள்ளனர். சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டு உள்ளன. அதுபோல, கிருமிநாசினி மூலம் அவ்வப்போது சுத்தம் செய்யவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, டீக்கடைகளிலும் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் அமர்ந்து டீ குடிக்க நேற்று முதல் அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியுடன் கூடிய டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் சிலர் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து டீ குடித்தனர். இதுபோல குன்னம், வேப்பந்தட்டை , பாடாலூர், மங்கலமேடு உள்பட பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் இந்த நடைமுறையை பின்பற்ற தொடங்கினர்.

[the_ad id=”7251″]
Leave a Reply

%d bloggers like this: