வீட்டில் 1.22 லட்சம் மதிப்பில் திருட்டு. Perambalur Theft

பெரம்பலூர் அருகே வீட்டில் 1.22 லட்சம் மதிப்பில் திருட்டு.

258

பெரம்பலூர் அருகே வீட்டில் 1.22 லட்சம் மதிப்பில் திருட்டு.

Perambalur Theft: Theft worth Rs 1.22 lakh

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ 1.22 லட்சம்  நகை, பணம் கொள்ளை போனது குறித்து காவலர்கள் விசாணை நடத்தி வருகின்றனர். Perambalur News

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்டது ரெங்கநாதபுரம் கிராமம். இவ்வூரின் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (33). இவரது மனைவி ரேவதி (29) இவர்களுக்கு 2 பிள்ளைகள். செல்வராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராஜின் தாய் மருதம்பாள் (52) என்பவரோடு ரேவதி மற்றும் அவரது 2 மகன்கள் ஒன்றாக வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு அனைவரும் சாப்பிட்டு, வீட்டைப்பூட்டை விட்டு, மாடியில் தூங்கச் சென்றுவிட்டனர். Perambalur News

பெரம்பலூர் அருகே விபத்து: சட்ட கல்லூரி மாணவர் பலி.

நேற்று அதிகாலை மருதம்பாள் பால் கறப்பதற்காக மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மருமகளையும் எழுப்பி வந்து வீட்டின் உள்ளே சென்ற பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த அரை பவுன் மோதிரங்கள் 2, ஒரு பவுன் மோதிரம், ஒரு பவுன் செயின், தாலிக்காசு, மாட்டல் என 4 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 2 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. Perambalur Theft

இவற்றின் மதிப்பு ரூ.1.22 லட்சம் எனக்கூறப்பட்டது. இது குறித்து தகவலறிந்து பெரம்பலூர் காவலர்கள் நேரில் சென்று திருட்டு பற்றி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றனர். காவல் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

tags: perambalur  tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: