பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மின்தடை நிலவும் பகுதிகள். Perambalur power cut

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மின்தடை நிலவும் பகுதிகள். 

540

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மின்தடை நிலவும் பகுதிகள்.

Perambalur Power cut Areas in today and tomorrow.

இன்றைய மின் தடை பகுதிகள்.(06.07.2020)

பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து பேரளி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பில்வாடி, குரும்பா பாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கி.புதூர், வாலிகாண்டபுரம் மற்றும் செங்குணம் ஆகிய கிராமங்களில் இன்று (6ம் தேதி) காலை 9.45 மணிமுதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். Perambalur Power cut

நாளைய மின்தடை பகுதிகள். (07.07.2020)

பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து மங்கூன் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான குரும்பலூர், பாளையம், புதுஆத்துர், இச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவுரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சாத்திரமனை, வேலூர், கீழக்கனவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை (7ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tags: perambalur tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: