பெரம்பலூரில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.

141

பெரம்பலூரில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார் | Perambalur News Today | Perambalur News

The collector provided safety equipment for the workers at Perambalur.

தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவுபெற்ற கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் நலவாரியத்தில் 46,277 உறுப்பினர்கள் பதிவு பெற்றுள்ளனர்.

கொரொனா பரவுதலை தடுக்கும் பொருட்டு பொது முடக்கத்தை முன்னிட்டு பதிவு பெற்ற கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக தலா ரூ.2000 மற்றும் உணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தவிட்டது. Perambalur News

இதை தொடர்ந்து அலுவலக வாயிலாக முறையே 24,051 பயனாளிகளுக்கு ரூ. 2000 மற்றும் 17,419 பேருக்கு உணவு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000 மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகங்கள் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது. Perambalur News

இதைதொடர்ந்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயலாளர் குறிப்பாணையின் படி பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு 303 தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Perambalur News

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு  உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா பங்கேற்று பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தொழிலாளர் நல உதவி ஆணையர் முஹம்மது யூசுப் உடனிருந்தார்.

tags: perambalur

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: