பெரம்பலூர் அருகே 5 மூட்டை சின்ன வெங்காயம் திருட்டு.Perambalur news

பெரம்பலூர் அருகே 5 மூட்டை சின்ன வெங்காயம் திருட்டு.

284

பெரம்பலூர் அருகே 5 மூட்டை சின்ன வெங்காயம் திருட்டு.


Perambalur news: Small onion theft near Perambalur.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 5 மூட்டை சின்ன வெங்காயம் மா்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

ஆலத்தூா் வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனா். தற்போது ஆடிப்பட்டம் தொடங்கியுள்ளதால், இப்பகுதியில் சின்ன வெங்காயம் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.perambalur district

பாடாலூா் அருகிலுள்ள நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சமுத்து, தனது நிலத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்வதற்காக சுமாா் 10 மூட்டை சின்ன வெங்காய விதைகளை பட்டறை அமைத்து பாதுகாப்பாக வைத்திருந்தாா்.

வயலை உழவு செய்து, பாா் பிடித்து தயாா் நிலையில் நடவுப் பணிக்காக கூலி ஆள்களுடன் சனிக்கிழமை காலை வயலுக்கு வந்தபோது, வயலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விதை வெங்காயத்தில் 5 மூட்டையை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.perambalur theft

தற்போது சின்ன வெங்காயம் ரூ. 60-க்கு விற்பனையாகும் நிலையில்,65 கிலோ எடை கொண்ட ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 5 மூட்டை சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து பச்சமுத்து அளித்த புகாரின்பேரில், பாடாலூா் காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

tags: perambalur news  perambalur district  perambalur theft  tamil news
Leave a Reply

%d bloggers like this: