பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 2 நாய்க்குட்டிகள் வழங்கப்பட்டது. Perambalur news

பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 2 நாய்க்குட்டிகள் வழங்கப்பட்டது.

192

பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு புதிதாக 2 நாய்க்குட்டிகள் வழங்கப்பட்டது.


Perambalur news: District Police received 2 new puppies.

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் குற்றங்களை கண்டறியவும், வெடி பொருட்கள் போன்றவற்றைக் கண்டறியவும் தனித்திறமை வாய்ந்த மோப்ப நாய்கள் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. perambalur district

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் மோப்பநாய் படைப்பிரிவில் பராமரிக்கப்படும் நாய்களுக்கு, ஜூலி, ரீட்டா, நிஞ்ஜா போன்ற ஆங்கில, வடமொழி பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டு வந்தன.

இதில் ஜூலி தற்போது வெடிபொருள் கண்டறியும் பிரிவிலும், நின்ஜா கிரைம் பிரிவிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட மோப்ப நாய் படை பிரிவுகளுக்கு புதிதாக 2 நாய்க்குட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. perambalur police

அதில் மோப்பநாய் படைப் பிரிவுக்கு வழங்கிய டாபர் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டிக்கு பைரவா எனவும், வேதிப்பொருட்கள் கண்டறியும் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜெர்மன் சப்போர்ட் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டிக்கு சக்தி எனவும் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தமிழில் பெயர்களை சூட்டினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி சுப்புராமன், துணை காவல் ஆய்வாளர் சுவாமிநாதன், பயிற்சியாளர் செந்தில் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.

tags: perambalur news, perambalur district, perambalur police, tamil news,
Leave a Reply

%d bloggers like this: