கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள்: பெரம்பலூரில் ஒளிப்பதிவு.

கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள்: பெரம்பலூரில் ஒளிப்பதிவு.

122

கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள்: பெரம்பலூரில் ஒளிப்பதிவு | perambalur news online

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வழியாக வரலாற்று பாட வகுப்புகள் பெரம்பலூரிலிருந்து ஒளிபரப்பும் பணி துவங்கியது.

Classes through kalvi TV: Cinematography at Perambalur. 

தமிழக அளவில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் பெரம்பலூரிலிருந்து கல்வித் தொலைக்காட்சியின் ஊடாக ஒளிபரப்பும் பணிகள் துவங்கியது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியில் கல்வியை போதிப்பதற்கு கல்வி தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலமாக மாணவர்களுக்கான பாடங்களை ஒளிப்பதிவு செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாற்றுப் பாட வகுப்புகள், பெரம்பலூரிலிருந்து வீடியோ ஒளிப்பதிவு செய்து, கல்வித் தொலைக்காட்சி மூலமாக தமிழக அளவிலான மாணவர்களுக்கு ஒளிபரப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. perambalur news online

பெரம்பலூர் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் 12-ம் வகுப்பு வரலாறுப் பாட ஆசிரியர்கள் பாடம் நடத்துவது வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றம் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் மற்றும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் குண சேகரன் ஆகியோர் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட கல்வித் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளர் வீடியோ ஒளிப்பதிவு செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழக அளவில் 12-ம் வகுப்புக்கான பாடவகுப்புகள் வருகின்ற 29-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக வரலாற்றுப் பாடம் மட்டும் தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து ஒளிப்பதிவு செய்து கல்வி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. perambalur news online

tag: perambalur, kalvi tv, perambalur news,

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: