முழுஊரடங்கால் வெறிச்சோடிய பெரம்பலூர். Perambalur news

முழுஊரடங்கால் வெறிச்சோடிய பெரம்பலூர்.

234

முழுஊரடங்கால் வெறிச்சோடிய பெரம்பலூர்.


Perambalur news: Perambalur deserted by the whole city in lockdown

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க ஜூலை மாதம் வரும் அணைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விதிகள் தளர்த்தப்படாத முழு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். perambalur district

இதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி மருந்தகம் மற்றும் பால் விற்பனையாகம் தவிர்த்து 100 சதவீத கடைகள் என மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, ஊராகப் பகுதிகளில் 2,800 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. perambalur lockdown

அரசு, தனியார் மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. ஏற்கனவே பஸ்கள் ஓடாததால் பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் பெரம்பலூர் நகருக்கு வெளியே மற்றும் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் அதிகாலையிலேயே இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. அதேபோல் ஊரக பகுதிகளில் மதுபான கடைகளின் அருகே அதிக விலைக்கு திருட்டு தனமாக மது விற்பனையும் செய்யப்பட்டது.

tags: perambalur news, perambalur district, perambalur lockdown, tamil news




Leave a Reply

%d bloggers like this: