பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.

பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை.

444

பெரம்பலூர் அருகே தாய், மகள் தற்கொலை | Perambalur News Today | Perambalur News

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்த தமிழரசனின் மனைவி ராணி (வயது 60). இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் வள்ளி (வயது-40), ராஜேஸ்வரி (வயது-37). சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் இறந்து விட்டார். Perambalur News Today

ராஜேஸ்வரி தனது தாயார் ராணியின் 4 பவுன் தாலி சங்கிலியை அடகு வைத்திருந்தார். அதைத் திருப்பி தராததால் தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபால் நேற்று முன்தினம் (18.06.2020) இரவு தகராறு நடந்துள்ளது. விபரம் தெரிந்து தாய் வீட்டிற்கு வந்த மூத்த மகள் வள்ளி, இருவரையும் சமாதானப்படுத்தினார். பிறகு தனது வீட்டு சென்றுவிட்டார். Perambalur News Today

[the_ad id=”7251″]

பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது.

பாடாலூா் அருகே 12 கோடி ஆண்டு கல்மரப் படிமம் கண்டெடுப்பு.

இந்நிலையில், நேற்று காலை ராணியின் வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ராஜேஸ்வரி இறந்து கிடந்துள்ளார். அவரது தாயார் ராணி மாடியில் உள்ள அறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து மருவத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[the_ad_placement id=”after-content”]

வளைகுடா செய்திகளுக்கு gcctamilnews.com
Leave a Reply

%d bloggers like this: