New twist in the murder case of Perambalur.

பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம் : முன்னாள் நகராட்சி தலைவர் கைது.

794

பெரம்பலூர் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் புதிய திருப்பம்: முன்னாள் நகராட்சி தலைவர் கைது | Perambalur News | Perambalur News Today

பெரம்பலூரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அமமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகரும் முன்னாள் நகராட்சித் தலைவருமான ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். Perambalur News

கடந்த ஜுன் 2-ம் தேதி மாலை விளாமுத்தூர் சாலையில் அமமுக மாணவரணி பெரம்பலூர் நகர செயலாளர் சங்கு பாண்டி என்கிற வல்லத்தரசுவையும் அவரது நண்பர் சூர்யாவையும் முன்விரோதம் காரணமாக  மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டியது இதில் வல்லத்தரசு கொல்லப்பட்டார்.

பெரம்பலூருக்கு சென்னையில் இருந்து வந்த 207 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பாடாலூா் அருகே 12 கோடி ஆண்டு கல்மரப் படிமம் கண்டெடுப்பு.

[the_ad id=”7251″]

இத்தாக்குதலில் படுகாயமடைந்த அவரது நண்பர் சூர்யா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Perambalur News

விசாரணையில், வல்லத்தரசு கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் அவரது அண்ணன் மணி என்பவருக்கும் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அதுதொடர்பாக வல்லத்தரசு விஜயராஜை தட்டிக் கேட்டதால் அவர்களிருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்துவந்ததும் தெரியவந்தது.

இக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் தேடிவந்த நிலையில், பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாஷ், விஜயராஜ், காக்கா கார்த்தி, கஞ்சா ராஜா ஆகிய 4 பேர் ஜுன் 4-ம் தேதி கரூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களனைவரும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். Perambalur News

[the_ad id=”7251″]

இக் கொலை வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் 18வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் (வயது 32), அழகிரி தெருவைச் சேர்ந்த மகேஷ் (வயது 31) ஆகியோரை பெரம்பலூர் காவல்துறையினர் ஜுன் 5-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், இக் கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் அதிமுக பிரமுகரும் முன்னாள் நகராட்சி தலைவருமான சங்குப்பேட்டை ரமேஷை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.  அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமேஷ் சிறிது காலம் அமமுகவில் இருந்துவிட்டு மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Perambalur News

source: angusam.com

[the_ad_placement id=”after-content”]




Leave a Reply

%d bloggers like this: