ஆடிப்பாடி கொரோனா நிவாரணம் கேட்ட பெரம்பலூர் நாட்டுப்புறக் கலைஞர்கள்

194

ஆடிப்பாடி கொரோனா நிவாரணம் கேட்ட பெரம்பலூர் நாட்டுப்புறக் கலைஞர்கள்.

கொரோனா நிவாரண நிதி கேட்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடிப்பாடி மனு கொடுத்தனர். பெரம்பலூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோழர் ஜீவா, அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தினர் தங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு வேடமிட்டு ஆடல் பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மருதையாற்றி குறுக்கே புதிய நீர்தேக்கம்: 4,200 ஏக்கர் பாசன வசதி பெறும்.

[the_ad id=”7251″]

ஆடல் பாடல் நிகழ்ச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஞானசேகரன் தொடங்கி வைத்தார். செயலாளர் ரமேஷ் பொருளாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாட்டுப்புற கலைஞர்கள் தாரை தப்பட்டை அடித்து பல்வேறு வேடங்களில் கூத்துக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரினர். இதில் பிரதான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சங்க பிரதிநிதிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லாமல் உணவுக்கும் வழியில்லாமல் மிகவும் சிரமத்தில் உள்ளார்கள். மேலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கான நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

[the_ad id=”7251″]

எனவே கிராமப்புற கலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அமைப்பு சாராத வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்கள், பதிவு செய்த அடையாள அடடையை பெறாதவர்கள் என அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும். மேலும் பல ஆண்டுகளாக நாட்டுப்புற கலைஞர்களாக பணியாற்றும் கலைஞர்களுக்கும் பதிவு செய்யாமல் விடுபட்ட கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: