மின் வாரிய பொறியாளா்

பெரம்பலூா் மின் வாரிய பொறியாளா் உயிரிழப்பு

367

பெரம்பலூா் மின் வாரிய பொறியாளா் உயிரிழப்பு


Perambalur News: Perambalur Power Board Supervisor Engineer Killed.

பெரம்பலூா் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் கருப்பையா நேற்று (28.07.2020) உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த கருப்பையா. இவருக்கு வயது 58. இவா் பெரம்பலூா் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளராக பணிபுரிந்து வந்தாா். கடந்த ஒரு வாரத்துக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டு துறையூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் சிறுவாச்சூரில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

Perambalur News :

அங்கு, கருப்பையாவுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலை தொடர்ந்து, அவரது சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தீவிர சிகிச்சை மேற்கொள்வதற்காக திருச்சியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அவா் உயிரிழந்தாா்.

முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், மாரடைப்பால் அவா் உயிரிழந்ததாகவும், இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

keyword: Perambalur news, perambalur news today, perambalur district news, perambalur mavattam

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: