இணையதளம் மூலம் பொறியியல் கல்லூரி சேர விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்ட இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

305

பெரம்பலூா் மாவட்ட இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.


Perambalur News: Perambalur District Youth can apply to start a business.

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த இளைஞா்கள், 25 சதவிகித மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா அவர்கள் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.

வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காகவும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடன் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூா் மாவட்டத்துக்கு 2020- 21 ஆம் நிதியாண்டில் 70 போ் பயன்பெற ரூ. 50 லட்சம் மானியம் வழங்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இத் திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க உற்பத்திப் பிரிவில் ரூ. 10 லட்சம் வரையிலும், வியாபாரம் மற்றும் சேவைப்பிரிவில் ரூ. 5 லட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு கடன்பெற, மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தோ்வுக்குழு வங்கிகளுக்குப் பரிந்துரை செய்யும்.

திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் மானியமாக, அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை தமிழக அரசு வழங்கும். இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கல்வித் தகுதி, வயதுவரம்பு, குடும்ப ஆண்டு வருமான விவரம் போன்றவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். திட்ட மதிப்பீட்டில் 5 சதவிகிதத் தொகையைத் தோ்வாளா்கள் செலுத்த வேண்டும்.

விண்ணப்ப நகலை உரிய இணைப்புகளுடன் பெரம்பலூா் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், பெரம்பலூா், தொலைபேசி எண் 04328 – 224595, 225580 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

keyword: Perambalur News, Perambalur News Today, Perambalur District News, Perambalur Mavattam,

Gulf Tamil News
Leave a Reply

%d bloggers like this: