பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு. Perambalur curfew

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு.

442

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு.

Perambalur curfew: Full curfew tomorrow in district

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார். Perambalur curfew

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக மாவட்டத்தில் ஜூலை முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Perambalur news

பெரம்பலூர் அருகே வீட்டில் 1.22 லட்சம் மதிப்பில் திருட்டு

அதனடிப்படையில் நாளை காலை 6 மணி முதல் 6-ம் தேதி காலை 6 மணிவரை 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தம் செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாது. Perambalur news

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதோடு அனைவரும் தத்தமது இல்லங்களில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்படுகிறது. மருந்தகங்கள், மருத்துவமனைகள் செயல்படும். வர்த்தகம் செய்வோரின் கடைகளுக்கு சீல் வைத்து குற்றப்பதிவு செய்யப்படும்  என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

tags: perambalur  tamil news
Leave a Reply

%d bloggers like this: