மராமத்து பணி: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பகிர்ந்தளிக்க பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு.

186

மராமத்து பணி: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பகிர்ந்தளிக்க பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவிடம் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் (திமுக) முத்தமிழ் செல்வி மதியழகன் நேற்று (18.06.2020) கோரிக்கை மனு அளித்தார்.

கோரிக்கை மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளான குளம், குட்டைகள் மேம்பாடு செய்வதற்காக 448 குட்டைகள் ரூ. 4 கோடியே 48 லட்சத்தில் மேம்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் ஆளும் கட்சியினர் மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.

[the_ad id=”7251″]

அதேபோல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை பங்கீட்டு கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட பிரதிநிதிகளையும் புறம் தள்ளி ஆளும் கட்சியினர் மிகப்பெரிய ஊழல் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனவே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், குடிமராமத்து மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு  முக்கியத்துவம் கொடுத்து பகிர்ந்தளித்து ஊழல் முறைகேடுகளை தவிர்க்கவும், தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]

 

[the_ad_placement id=”after-content”]




Leave a Reply

%d bloggers like this: