Opening of the Q Division Office

காணொலி மூலம் கியூ பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்.

169

காணொலி மூலம் கியூ பிரிவு அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற புலனாய்வுத்துறைக்கு புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் சார்நிலை கருவூல அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

துறைமங்கலத்தில் குற்ற புலனாய்வுத்துறைக்கு புதியதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிடத்தையும் அதேபோல ஆலத்தூர் வட்டத்தில் சார்நிலை கருவூலத்திற்கான கட்டிடத்தையும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (16.06.2020) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலியின் மூலமாக திறந்து வைத்தார்.

[the_ad id=”7251″]

பெரம்பலூர் மகாத்மா பப்ளிக் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூரில், கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேர் கைது.

மாவட்ட ஆட்சியர் சாந்தா குத்துவிளக்கேற்றி, புதிய கட்டிடங்கள் பார்வையிட்டார்.  இதில் குற்ற புலனாய்வுத்துறைக்கு கட்டப்பட்ட கட்டிடத்தின் தரைதளத்தில் போர்டிகோ உள்பட கணினி அறை, ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, எழுத்தர் அறை, பதிவறை மற்றும் கைதி அறை மற்றும் கழிவறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் கூட்ட அரங்கு உள்பட  துணை காவல்துறை கண்கானிப்பாளர் அலுவலகம், மற்றும் தகவல் அறைகளுடன் மொத்தம் 309.77 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ரூ.89.19 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆலத்தூர் வட்டத்தில் சார்நிலை கருவூல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடமானது ரூ.72.05 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 292.50 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன், ஆர்டிஒ சக்திவேல், டிஎஸ்பி-கள் கென்னடி, சிவசங்கர், காவல் ஆய்வாலர் அமல்ராஜ், எஸ்ஐ-கள் ராஜேந்திரன், ஸ்ரீதர், மாவட்ட கருவூல அலுவலர் பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: