17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர் போக்சோவில் கைது.

417

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர் போக்சோவில் கைது. (Man arrested for raping  girl)

பெரம்பலூர் அருகே, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அந்த நபரை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துறைமங்கலம் கே.கே., நகரைச் சேர்ந்தவர் வையாபுரி மகன் செல்வம் (வயது 42). ஏற்கனவே திருமணமான கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அ.ம.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை.

திறன் பயிற்சிக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.

விவரமறிந்த அந்தச் சிறுமியின் தாய் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் ஆய்வாளர் கலையரசி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: