மருந்து கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு. Medic waste

பெரம்பலூர் அருகே மருந்து கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு. Medic waste

303

பெரம்பலூர் அருகே மருந்து கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.

Larry captive with medic waste near Perambalur

மாவட்டத் தலைநகராக விளங்கும் பெரம்பலூர் இரண்டாம் நிலை நகராட்சி அந்தஸ்து கொண்டது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாதாளசாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதிலுள்ள 21 வார்டுகளின் கழிவுநீர், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நெடுவாசல் பிரிவு ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு சென்று பெயரளவில் சுத்திகரிக்கப்பட்டு அருகிலுள்ள வாய்க்காலில் விடப்படுகிறது. இதனால் நெடுவாசல், பெரம்பலூர் பகுதி விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலேயே நகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் மறு சுழற்சிக்காக எரியூட்டப்படுகிறது. இதில் மிஞ்சும் கரித்தூள், கருகிய மண் போன்றவற்றோடு, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய மருந்துக் கழிவுகளான சிரிஞ்சுகள், உடைந்த மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட விஷக்கழிவுகள் அனைத்தும் நெடுவாசல் அருகே உள்ள 5.7 ஏக்கர், சுற்றுச்சுவர் கட்டப்பட்ட நிலத்தில் நகராட்சியின் டாரஸ் லாரிமூலம் ஏற்றிச் சென்று கொட்டப்பட்டு வருகிறது. Medic waste

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு.

அப்பகுதியிலே கொட்டப்படும் எரியூட்டப்பட்ட மருந்துக் கழிவுகளால், மழையில் கரைந்து மண்ணுக்குள் இறங்கி அதன் அருகருகே உள்ள ஊராட்சியின் 3 குடிநீர்க் கிணறுகளில் தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமும் எரியூட்டப்பட்ட மருந்துக் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் விடாமல் கொட்டி வருவதால் ஆத்திரமடைந்த நெடுவாசல் கிராம பொது மக்கள் நேற்று குப்பையை கொட்ட வந்த நகராட்சியின் டாரஸ் லாரி ஒன்றை சிறைபிடித்தனர்.

தகவலறிந்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் சார்பில், நகராட்சி உதவி பொறியாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், பன்னீர்செல்வம் ஆகியோர் நெடுவாசல் மக்களிடம் பேசி, பெரம்பலூர் அலுவலகம் வந்து பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வுகாணும்படி கேட்டுக் கொண்டதால், டாரஸ்லாரி சிறைபிடிப்பை நெடுவாசல் மக்கள் கைவிட்டனர். இதனால் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

tags: perambalur  tamil news
Leave a Reply

%d bloggers like this: