காமராஜர் பிறந்த தின விழா.

பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தின விழா.

117

பெரம்பலூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்த தின விழா.


Perambalur News: Kamaraj’s birthday Celebration in Perambalur district.

ஊரடங்கினால் பள்ளிகள் மூடப் பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15  கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் நேற்று பள்ளிகளுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ்-2 விலையில்லா பாடப்புத்தகங்களை வாங்க வந்திருந்த மாணவ-மாணவிகள் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Perambalur News:

பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Keyword: perambalur news, perambalur news today, Perambalur district news, Perambalur Maavattam
Leave a Reply

%d bloggers like this: