கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு.

144

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க பெரம்பலூர் மாவட்ட பெண்களுக்கு அழைப்பு.

Invitation to the women of Perambalur district to apply for the Kalpana Chawla Award.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வீரதீர சமுதாய தொண்டு செய்து சாதனை புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட பிரிவு 2020 ஆம் ஆண்டுக்கான வீரதீர சமுதாய தொண்டு செய்து சாதனை புரிந்த பெண் ஒருவருக்கு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்க உள்ளது.

இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். வீரதீர செயல்கள் புரிந்த தகுதி வாய்ந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியானோர் வரும் 26 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் அமைந்துள்ள பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags: perambalur
Leave a Reply

%d bloggers like this: