பெரம்பலூர் அருகே மனைவிக்கு தீ வைத்த கணவர்.

பெரம்பலூர் அருகே மனைவிக்கு தீ வைத்த கணவர்.

602

பெரம்பலூர் அருகே மனைவிக்கு தீ வைத்த கணவர்.


Perambalur news: Husband sets fire to wife near Perambalur.

பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவரது மனைவி வனிதா (23). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. லாரி டிரைவரான சதிஷ்குமாருக்கும், வனிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. perambalur news

மேலும் சதீஷ்குமார் தான் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்காக வணிதாவிடம் கொடுக்காமல், மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். perambalur district

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சதிஷ்குமாரின் சட்டை பையில் இருந்த ஆயிரம் ரூபாயை வனிதா எடுத்து பீரோவில் மறைத்து வைத்துள்ளார். பணத்தை காணவில்லை என்று சதீஷ்குமார் காலை முதலே வணிதாவிடம் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மதியம் வனிதா தனது தாய் லட்சுமியை வீட்டிற்கு வரவழைத்தார். மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சதீஷ்குமார், வணிதாவிடம் மீண்டும் பணத்தை கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வனிதா மீது ஊற்றி தீயை பற்ற வைத்தார். perambalur news today

உடல் முழுவதும் பற்றிக்கொண்ட தீயால் அலறி துடித்த வனிதாவின் சத்தத்தை கேட்டு அவரது தாய் தண்ணீரை வனிதாவின் மீது ஊற்றி தீயை அணைத்து காப்பாற்றினார். தீக்காயங்களுடன் இருந்த வனிதாவை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவரது தாய் சேர்த்தார்.

இது தொடர்பாக வனிதா அளித்த வாக்குமூலத்தின் பேரில், பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுப்பையா கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சதிஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  தீ வைத்த கணவர்

tags: perambalur news, perambalur news today, perambalur district, tamil news
Leave a Reply

%d bloggers like this: