முழு பொது முடக்கம்:வெறிச்சோடிய பெரம்பலூர் நகரம்.Perambalur city

முழு பொது முடக்கம் : வெறிச்சோடிய பெரம்பலூர் நகரம்

181

முழு பொது முடக்கம் : வெறிச்சோடிய பெரம்பலூர் நகரம்.

Perambalur News:  Full public freeze: deserted Perambalur city.

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. எனினும் அத்தியாவசியத் தேவைகளான மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம், மருத்துவமனைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.

ஜவுளிக் கடைகள், உணவகங்கள், பல்பொருள்கள் விற்பனை அங்காடிகள், காய்கனிக் கடைகள், பேக்கரி, தேநீரகங்கள், மின் மற்றும் மின்னணு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. Perambalur District News

மேலும், காா், ஆட்டோ, வேன், ஷோ் ஆட்டோக்களும் இயங்கவில்லை. பொதுமக்களும், குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல், தொலைக்காட்சி மற்றும் செல்லிடப்பேசிகளில் முடங்கினா்.

பழைய, புறநகரப் பேருந்து நிலையங்கள், கடைவீதி, காமராஜா் வளைவு, எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை உள்பட அனைத்து சாலைகள், தெருக்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. Perambalur District News

அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால், வெளியூா் மக்கள் உணவுக்கு சிரமப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை, புறநகரப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள அம்மா உணவகங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டிருந்தன. இருப்பினும், பொது மக்கள் கூட்டமில்லை.

tags: perambalurLeave a Reply

%d bloggers like this: