Banking exam

பெரம்பலூரில் வங்கித் தோ்வுக்கு இலவச பயிற்சி ஆக. 25-ல் துவக்கம்.

244

பெரம்பலூரில் வங்கித் தோ்வுக்கு இலவச பயிற்சி ஆக. 25-ல் துவக்கம்.


Perambalur News: Free Training for Banking exam in Perambalur.


பெரம்பலூரில் வங்கி அலுவலா் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி இந்த ஆகஸ்ட் மாதம் 25-ல் துவங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பெரம்பலூரில் வங்கி அலுவலா் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி இந்த ஆகஸ்ட் மாதம் 25-ல் துவங்குகின்றது. இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்க உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் அக்டோபர் மாதம் வங்கி அலுவலா் முதல்நிலை தோ்வு நடைபெற உள்ள நிலையில் அந்த தேர்வுக்கான இலவச பயிற்சிகள் இந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தொடங்குகிறது. காலை 10 மணி முதல் இணையவழி செயலி மூலமாக பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகிறது. பயிற்சியின்போது, இலவசமாக பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டின் மாதிரி வினாத்தாள்கள் வழங்குவதோடு, மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரத்தை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9499055913 ஆகிய எண்ணில் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்புகொண்டு, தங்களது வாட்ஸ் அப் எண்ணை பதிவுசெய்து பயன்பெறலாம் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

keyword: perambalur




Leave a Reply

%d bloggers like this: